விக்ரமசிங்கபுரத்தில் பொது மலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மூன்று விளக்கு திடலில் பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக இயற்கை வளங்களை காப்பது குறித்து விழிப்புணர்வும், வனத்துறையினரின் செயல்பாடுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முல்லை நில தமிழர் கட்சி தலைவர் கரும்புலி கண்ணன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதிகைமலை பாதுகாப்பு இயக்க செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்துள்ளார்.
மேலும் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியினர், த.ம.மு.க நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தமிழ் தேச தன்னுரிமை கட்சித்தலைவர் வியனரசு, உட்பட பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றார்கள். இதைத்தொடர்ந்து அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உட்பட பல சுற்றுலா தளங்களுக்கு அதிகளவு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.