Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காட்டு பன்றியை கொன்ற முதியவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான வயலில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சின்ன ஆவுடைப்பேரி கண்மாய், பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் போன்ற பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்தனர். அதன்பின் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அழகர் என்பவர் தோட்ட உரிமையாளருக்கு தெரியாமல் மின்வெளி அமைத்து காட்டுப்பன்றியை கொன்றது தெரியவந்துள்ளது. அதன்பிறகு அழகரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |