Categories
மாநில செய்திகள்

வந்தவாசி சட்டமன்ற தொகுதி மக்களின் பிரச்சனையும், எதிர்பார்ப்பும் …!!

வந்தவாசி என்றாலே நினைவுக்கு வருவது கோரைப்பாய் நெசவும், வெண்குன்றம் கிராமத்தில் உள்ள தவளகிரி ஈஸ்வரர் கோவிலும் தான். வந்தவாசி தொகுதி விவசாயம் நிறைந்த இடமாகும். கடந்த 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2016ஆம் ஆண்டு வரை 16 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது வந்தவாசி தொகுதி. இதில் அதிக முறை திமுகவே வென்றுள்ளது. கடந்த தேர்தலில் திமுக சார்பில் அம்பேத்குமார் போட்டியிட்டு வென்றார். வந்தவாசியில் மொத்தம் 2,35,044 வாக்காளர்கள் உள்ளனர். 450 கோடி ரூபாய் செலவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திண்டிவனம் நகரி ரயில் பாதை பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கின்றன.

வந்தவாசிக்கு பெயர் பெற்ற கோரைப்பாய் தொழிலை பாதுகாக்க நெசவாளர் பூங்கா அமைக்கப்படவில்லை என்பது மக்களின் குமுறல். கோரை பாய் நெசவுக்கு இலவச மின்சாரம், கோரை பாய் நெசவு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்,  நெசவாளர்களுக்கு தனி தொழிற்பேட்டை உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர்.

வந்தவாசி உள்ள சுகநதி ஆற்றை சீரமைத்து படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பது  தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். வந்தவாசி புதிய பேருந்து நிலையம் சரியான வசதிகள் இன்றி இருக்கிறது. சாலையை சீரமைத்து பேருந்து நிலையம் உரிய முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வந்தவாசியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் தொடங்கப்பட்ட 15 கோடி ரூபாய் செலவிலான மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதனை மீண்டும் செயல்படுத்தி அனைவருக்கும் குடிநீர் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது தொகுதி வாக்காளர்களின் கோரிக்கையாகும்.

Categories

Tech |