அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் முடியும் தருவாயில் உள்ள ‘வலிமை’ படத்தில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்களோ ‘வலிமை’ அப்டேட்டுக்காக பல்வேறு வழிகளில் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் முதன்முறையாக ‘வலிமை’ அப்டேட் குறித்த தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மே 1-ம் தேதி அஜித் தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினத்தில் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.