Categories
அரசியல் மாநில செய்திகள்

வண்டவாளம் தண்டவாளத்தில் எறியுள்ளது – ஸ்டாலின் விளாசல் …!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து திமுக , காங்கிரஸ் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை பேசிய முக.ஸ்டாலின் , 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் உச்ச நீதிமன்ற உத்தரவில் சபாநாயகர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்று  நாங்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லவில்லை.

முதல்வரை மாற்றவேண்டுமென்று ஆளுநரிடம் மனு கொடுத்ததற்கு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 18 எம்எல்ஏக்களுக்கு ஒரு நடவடிக்கை , 11 எம்எல்ஏக்களுக்கு ஒரு மாதிரியான நடவடிக்கை.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தனி நபர் தீர்மானத்தை கொடுத்துள்ளோம். ஆனால் அதை விவாதிக்காமல்  தட்டிக் கழிக்கின்றார்கள். இருந்தாலும் இடையில் இந்த பிரச்சினையை கிளப்பினாலும் முதல்வர் பதில் சொல்லாமல் அமைச்சர் உதயகுமார் பேசுகின்றார்.

அவர் , எதோ பிரச்சாரக் கூட்டத்தில் பேசுற மாதிரி வீராவேசமாக பேசுறார்.  வாக்கு வங்கிக்காக நாங்கள் பேசுகின்றோம் என்று பாஜகவுக்கு வக்காலத்து வாங்கு கின்றார்கள். பாஜகவுக்கு அஞ்சி கைகட்டி , வாய்பொத்தி , ஆட்சி உடனே போயிரும். இவர்கள் எல்லாம் சிறைச்சாலைக்குள்ள இருக்கணும். அவ்வளவு வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி  வைத்துள்ளார்கள் என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |