Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 7 பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!! பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!!

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர். தலைநகர் சியோலை அடுத்துள்ள டேய்ஜியான் எனும் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டடத்தின் தரைத்தளத்தில் கார்களை  நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ காற்று பலமாக வீசியதால் மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. மேலும் விபத்து பற்றி தகவல் அறிந்த ஜியோள் மற்றும் டேய் நகர தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி உள்ளனர் இந்த நிலையில் வளாகத்தில் சிக்கியிருந்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி கட்டிடத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். பல மணிநேர போராட்டத்திற்கு பின் வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கட்டடத்தின் தரைத்தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர். இந்த தீ விபத்து நேரிட்டது காலை நேரம் என்ற காரணத்தினால் வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. மேலும் இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறியுள்ள காவல் அதிகாரிகள் விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |