Categories
மாநில செய்திகள்

வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!…. இதை பயன்படுத்தினால் உரிமம் ரத்து…. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட அங்காடி அல்லது வணிக நிறுவனத்தின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. அதாவது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 25-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 2,496 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 600 அபராதமும் வசூலிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 351 A-ன் படி, தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைத்தல், தயாரித்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் மற்றும் உபயோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
தடையை மீறி பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு முதல் மூன்று முறை அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் நான்காவது முறையாக விதியை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |