தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை மூலமாக வணிகர் நல வாரியம் நடத்தபடுகிறது. இந்த நல வாரியத்தின் மூலமாக வணிகர்கள் மற்றும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, நலிவுற்ற வணிகர்களுக்கு உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர்கள் நலவாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதற்கான கால அவகாசத்தை மார்ச் 31, 2022 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.