Categories
உலக செய்திகள்

வட கொரிய செய்தியாளருக்கு…. கிம் ஜாங் உன் வழங்கிய சூப்பர் பரிசு….!!!!!

கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவின் தற்போதைய அதிபர் பதவியில் கிம்ஜாங் உன் இருக்கிறார். இவர் உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே ஆகும். ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு உலகநாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் அவர், இப்போது 50 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த வடகொரிய செய்தியாளருக்கு கிம் ஜாங் உன் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கியுள்ளார்.

கடந்த 1994 ஆம் வருடம் தந்தை கிம் இல் சுங்கின் மரணம் முதல் 2006 இல் அதன் முதல் அணு ஆயுத சோதனை வரை தன் 50 வருடகால வாழ்க்கையில் வடகொரியாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் சிலவற்றை செய்திகளாக வழங்கி புகழ்பெற்றவர் ரி சுன் ஹி ஆவார். இப்போது அவருக்கு 70 வயது ஆகிறது. இந்நிலையில் தற்போது அவர் செய்தியாளராக 50 வருடங்களை நிறைவு செய்துள்ளதை ஒட்டி அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பை கிம் பரிசாக வழங்கியுள்ளார். ரி சுன் ஹி தொடர்பாக கிம்ஜாங் உன் கூறியதாவது “சிறுவயதில் இருந்தே தொகுப்பாளராக பணிபுரிந்த இவர்  நாட்டின் பொக்கிஷங்களில் ஒருவர்” என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |