.தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக் குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றி பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பொன்னின் செல்வன் படம் குழுவினர் கலந்துகொண்டர். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினர். இதில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் வட இந்திய, தென் இந்திய திரைப்படங்கள் என பிரித்துப் பார்ப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய், இந்திய சினிமாவுக்கு இப்போது ஒரு ‘அற்புதமான நேரம்’, ஏனெனில் பார்வையாளர்கள் ‘ஒவ்வொரு பகுதியிலிருந்தும்’ படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். சினிமாவையும் சினிமா கலைஞர்களையும் அந்த மாதிரியான முறையில் உணர்வதில் இருந்து நாம் விலக வேண்டும்.சினிமாவில் தடைகள் உடைகின்றன. இது கலைஞர்களுக்கும் விடுதலை தரக்கூடியது.எனவே நாம் கூட்டாக இதற்கு அதிக ஆதரவு கொடுக்க வேண்டும். ஆர்ஆர்ஆர், புஷ்பா மற்றும் கேஜிஎப் -2 போன்ற பல தென்னிந்திய படங்கள் சமீப காலங்களில் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளன.கடந்த சில மாதங்களாக இந்தி அல்லாத பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
அதனை தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் திரைப்படத் தொழில்களுக்கு இடையே உள்ள மொழித் தடைகள் இப்போது உடைக்கப்படுகின்றன.எல்லா இடங்களிலிருந்தும் படங்கள் இப்போது அனைவராலும் பார்க்கப்படுகின்றன.கலைஞர்கள் மற்றும் சினிமாவைப் பார்க்கும் வழக்கமான முறையிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். இந்த தடைகள் அனைத்தும் குறைந்துவிட்ட ஒரு சிறந்த நேரம் இது என்று நான் நினைக்கிறேன். பார்வையாளர்கள் மற்றும் எங்கள் வாசகர்கள் அந்த வழக்கமான பார்வைக்கு செல்லாமல் இருக்க உதவ வேண்டும். கலை எப்போதும் இருந்து வருகிறது, பார்வையாளர்களைக் கண்டறிந்து, அவர்களால் பாராட்டப்படுகிறது. நம் சினிமாவை தேசிய அளவில் மக்கள் அறிவார்கள்.இது பல தளங்களில் தேசிய அளவில் அணுகக்கூடிய சரியான நேரம். இந்தியா முழுவதும் உள்ள சினிமாவை அனைவரும் பார்க்கலாம்.நாடு முழுவதிலும் இருந்து மக்கள் சினிமாவை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ‘தெளிவாக’ தெரிகிறது.