Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவர்”…. போலீஸ்சார் வலைவீச்சு….!!!!

வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் அரசு சார்பாக மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிலர் இந்த மண்ணெண்ணையை பாதுக்கி வைத்து கேரளாவுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தொடர்ந்து நடந்து வருகின்றது.

இந்த நிலையில் ராமன்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜேசுபாலன் என்பவர் அவரின் வீட்டில் சட்ட விரோதமாக மானிய விலையில் எண்ணெய் வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து தகவல் அறிந்து வந்த கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள். அதில் 34 கேன்களில் 1200 லிட்டர் மண்ணெண்ணெய் மானிய விலையில் வாங்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்த பொழுது ஜேசுபாலன் அதிகாரிகளிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் வழக்குப்பதிவு தலைமறைவாக இருக்கும் ஜேசுபாலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |