வட்டார கல்வி அலுவலர்கள் நேரடி தேர்வு குறித்த திருத்தப்பட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
வட்டார கல்வி அலுவலர்கள் நேரடி தேர்வு தொடர்பான திருத்தப்பட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவது குறித்து 2019 நவம்பர் 27-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இனவாரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு WWW.trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.