சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்காக நள்ளிரவு 12 15 மணிக்கு பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுள்ளது. கண்டக்டர் கலியபெருமாள் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக பார்த்தபோது கைப்பை மாயமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொடர் விடுமுறையின் காரணமாக பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் கண்டக்டர் கலியபெருமாள் கைப்பையை பறித்து தப்பியது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 13 ஆயிரம் ரொக்கம் மற்றும் பயண சீட்டுகள் இருந்துள்ளது. இது பற்றி கலியபெருமாள் பேருந்து நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார். பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவுகளைக் கொண்டு மரபு நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றார்கள். வடிவேல் பட பாணியில் பேருந்து கண்டக்டரிடம் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.