Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு பர்த்டே செலிப்ரேஷன்…. “மாமன்னன் படக்குழுவினருடன் கொண்டாட்டம்”…!!!!!

நடிகர் வடிவேலு மாமன்னன் படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை உச்ச நடிகராக வலம் வருகின்றார் வடிவேலு. இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தன் நடிப்பால் சிரிக்க வைத்து விடுவார். இந்நிலையில் அவர் நேற்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் வடிவேலு தற்பொழுது நடித்துவரும் மாமன்னன் பட குழுவினருடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் பட குழுவினர்களான இயக்குனர் செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பாளர் என பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் அனைவரும் வடிவேலுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். மாமன்னன் பட குழுவினருடன் வடிவேலு பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Categories

Tech |