வடிச்ச கஞ்சியின் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கண்ணாலம் :
இதில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம். ஒரு டம்ளர் கஞ்சியுடன் மோர் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள வெப்பம் தணிந்து நீர் இழப்பையும் ஈடுகட்டுகிறது. இந்த அரிசி கஞ்சியில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கும் குடிக்க கொடுக்கலாம். இது அவர்கள் உடல் வளர்ச்சியில் நன்மை பயக்கும். அரிசி கஞ்சிக்கு பசியை தூண்டும் வலிமையுள்ளது. எனவே பழசாறுகளுக்கு ஈடாக அரிசி கஞ்சி குடிப்பதும் பசியை தூண்ட உதவுகிறது. இதில் சிறிதளவு புதினா மற்றும் சீரகத்தூள் சேர்த்து குடிப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
தோலில் ஏற்ப்படும் சுருக்கங்களை அகற்றி இளமை தோற்றத்தை கொடுக்கும் சக்தி கொண்டது.
கால் வலியால் அவதிப்படுபவர்கள் அரிசி கஞ்சியுடன் வெந்நீர் கலந்து கல் உப்பு சிறிதளவு சேர்த்து கால்கள் மூழ்கும் படி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு கழுவிக்கொள்ளலாம். இதனால் நெடுநாட்களாக தீராமல் இருந்த கால்வலி சட்டென பறந்து போவதை உணரலாம்.