Categories
மாநில செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் அடுத்த மாத இறுதிக்குள்…. அமைச்சர் சூப்பர் தகவல்…!!!!

தமிழகத்தில் இந்து சமய நிலை அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் நேற்று வடபழனி முருகன் கோவில் மற்றும் ஆதிமூலப் பெருமாள் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் 34 திருப்பணிகளுக்கு 2.56 கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அடுத்த  மாத இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும்.

அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிக்காக திருமண மண்டபம்,அன்னதான கூடம்,முடி காணிக்கை செலுத்தும் இடம், மற்றும் பல்நோக்கு கட்டிடம் ஆகிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் பக்தர்கள் அமாவாசை தினத்தில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் தனி கட்டிடம் விரைவில் அமைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து வடபழனி ஆதிமூலபெருமாள் கோவிலில் பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்ததற்காக 8,00,000 செலவில் கடைகள்  திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலை திருப்பதிக்கு நிகராக ரூ.150 கோடி செலவில் பல பணிகள் விரைவில் தொடங்கப்படும். திருப்பணி நடைபெற்று வரும் கோவில்களில் பணிகளை விரைவில் முடித்து குடமுழுக்கு நடத்தப்படும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |