தமிழகத்தில் பருவ மழையை எதிர்கொள்வதற்கு அனைத்து மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மேலும் கூடுதலாக 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்ற ஆட்சியர் கட்டிடத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் இன்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், “சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை நீர்நிலைகளில் சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத வகையில் தமிழகத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவ மழையை எதிர்கொள்வதற்கு அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தயார் நிலையில் இருக்கின்றன” என்று அவர் கூறியுள்ளார்.