தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதற்காக எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு பேசிய அவர் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது போதிய அளவு மழை பெய்து கொண்டிருப்பதால் உணவு பொருள் உற்பத்தி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அதனை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் தயாராக இருக்கின்றன. புயல் காலத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.கருணா பொது முடக்கம் அமலில் இருந்தாலும் 90 சதவீதம் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது”என்று அவர் கூறியுள்ளார்.