Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி!…. அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி இதே பகுதிகளில் உருவாகி நவ..9,11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகவே வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு எந்த நேரமும் அனைத்துத் துறை அதிகாரிகளும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சரான மெய்யநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டத்தில்  அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Categories

Tech |