தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில்,அதிக கன மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்து தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதிகளும் அரசுத்துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.அதேசமயம் மழைக்காலத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை குறைத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.