வடகிழக்கு பருவமழை தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கும் முன்னதாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் மழை நீர் வடிகால் பணிகளை கண்காணிக்கவும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் பணிகளை தொடங்கி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியும், இதர பணிகள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.