Categories
தேசிய செய்திகள்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில்… இலவச கட்டிப்பிடி வைத்தியம் நடத்திய இளம் பெண்கள்…!!!!!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பெங்களூருவில் இது போன்ற பண்டிகைகளுக்கு எம்.ஜி ரோடு, சர்ச் தெரு உட்பட சில முக்கிய இடங்கள் பெயர் போனவை ஆகும். புத்தாண்டின் முதல் நாள் இரவு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவில் காணப்படுவார்கள். இந்நிலையில் பெங்களூர் சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரண்டு இளம் பெண்கள் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல்ஹாசன் கூறுவது போல இலவசமாக கட்டி பிடி வைத்தியம் செய்து வருகின்றார்கள்.

தனியார் கல்லூரியில் படித்து வரும் அபூர்வ அகர்வால் (19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா(22) என்ற இரு பெண்களும் சர்ச் தெருவில் கைகளில் ஃப்ரீ ஹக்ஸ் எனும் பதாகைகளை ஏந்தியபடி அவர்களை கடந்து செல்பவர்கள் பலரையும் கட்டிப்பிடித்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, சமூக வலைதளங்களில் இது போன்ற நிகழ்வு ஒன்றை கண்டோம். அதில் மனிதர்கள் ஒருவர் ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டால் அறிவியல் ரீதியாக மன அழுத்தம் குறையும் என கூறப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் படிப்பு, வேலை என பல்வேறு எண்ணங்களை குறிக்கோளாக கொண்டுள்ள மக்களுக்கு ஒருவரை ஒருவர் நின்று ஆரத்தழுவ நேரமில்லை. அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை மேற்கொண்டோம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |