கமல் நடிப்பில் வெளியாகிய வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் வருவதைப் போன்று மோடி வருகைக்காக குஜராத் மோர்பி மருத்துவமனை புனரமைக்கப்பட்டதாக விமரிசித்து இருக்கும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் ஹிந்தி ரீ மேக் திரைப்படம் முன்னாபாய் எம்பிபிஎஸ்.
Modi ji is visit to Morbi hospital, and the preparations made for his visit, remind us of Munnabhai MBBS.
Sometimes reality is close to comedy, as a tragedy is sought to be made a farce pic.twitter.com/OHJYTbAKXL— Prashant Bhushan (@pbhushan1) November 2, 2022
இந்த படத்தில் வரும் காட்சிகளையும், மோர்பி மருத்துவமனையை புனரமைத்தது மற்றும் சாலைகள் போட்ட வீடியோக்களையும் ஒன்றாக இணைத்து ஒரு வீடியோவை அவர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண் கூறியிருப்பதாவது, மோர்பி மருத்துவமனைக்கு மோடி வருகையையொட்டி, மருத்துவமனையில் மின்னல் வேகத்தில் நடைபெற்ற புனரமைப்புப் பணிகள் நமக்கு முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தையே நினைவூட்டுகிறது. சோக நிகழ்வுகளைக்கூட கேலிக்கூத்தாக்க நினைப்பதால், சில சமயங்களில் நடக்கும் நிகழ்வுகள் நகைச்சுவைக்கு மிக அருகில் வந்துவிடுகிறது என்று பதிவிட்டு விடியோவையும் இணைத்துள்ளார்.