Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வசூலில் பட்டைய கிளப்பும் துல்கர் சல்மானின் ‘குருப்’… வெளியான மாஸ் தகவல்…!!!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குருப் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

Dulquer Salmaan's Kurup to release in theatres on November 12. See new  posters - Movies News

தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் குருப் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் குருப் படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ.4.57 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.81 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |