ராதே ஷ்யாம் திரைப்படம் வசூலில் பெரிய இழப்பை சந்திருப்பதால் 50 கோடியை பிரபாஸ் தயாரிப்பாளரிடம் கொடுத்துள்ளார்.
ராதே ஷ்யாம் திரைப்படமானது ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் வெளியாகி பல விமர்சனங்களை பெற்று, வசூலில் படுதோல்வியடைந்து இருக்கின்றது. இத்திரைப்படத்தில் மேக்கிங்கில் கவனம் செலுத்திய மாதிரி திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
திரைப்படமானது பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் வசூலில் நூத்தி முப்பத்தி எட்டு கோடியை எட்ட வேண்டுமாம். ஆனால் படமானது வெளியாகி 10 நாட்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 75 கோடி மட்டுமே வசூல் செய்து இருக்கின்றது. இதனால் 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக படக்குழுவினர் கூறியிருக்கின்றனர். இந்நிலையில் பிரபாஸ் இந்த படத்தில் நடிப்பதற்காக 100 கோடியை சம்பளமாக பெற்றுள்ள நிலையில் 50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.