தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால் ஒடிசா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதன் காரணமாக வங்க கடலில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.