புதிய நிதியாண்டு தற்போது தொடங்கியுள்ள நிலையில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதங்களை தற்போது மாற்றியுள்ளது. புதிய வட்டி வீதங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி தொகை தினசரி பேலன்ஸ் தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஆண்டுவாரியாக ஜூன், செப்டம்பர், டிசம்பர் மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்தப்படுகின்றது.
இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்சம் 2.75 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 2.90 சதவீத வட்டியை வழங்குகிறது. முந்தைய வட்டி விகிதங்கள் உடன் ஒப்பிடுகையில் 200 கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ்-க்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய வட்டி விகிதங்கள்:
10 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் தொகைக்கு இதுவரை 2.90 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது. இனி 2.75 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
200 கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ் தொகைக்கு இதுவரை 2.90 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 2.80 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பேலன்ஸ் தொகை இதுவரை 2.90 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் இனியும் 2.90 சதவீதம் வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.