Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வங்கியில் இருந்து வந்த புகை…. வெளியேற்றப்பட்ட மக்கள்…. தடுக்கப்பட்ட பெரும் தீ விபத்து….!!

மயிலாடுதுறை வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில்  அதிஷ்டவசமாக  மக்கள் உயிர்தப்பினர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை மகாதான தெருவில்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று அமைந்துள்ளது.இந்த வங்கியில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் எதிர்பாராத விதமாக இன்வெட்டர் அறையிலிருந்து திடீரென புகை வந்தது. இந்த புகை வங்கி  முழுவதும் பரவியதால் அங்குள்ள  வாடிக்கையாளர்கள் வெளியேற்றபட்டனர்.

உடனே வங்கி ஊழியர்கள் அங்கு இருந்த தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர் .இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இன்வெட்டர் பேட்டரி இருக்கும் ரூம்க்கு செல்லும் மின் இணைப்பை அறுத்துவிட்டார்கள். இதனால் மேலும் விபத்து ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |