Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வங்கியில் இருந்து பேசுகிறோம்”….. வாலிபர் கணக்கில் ரூ.5 லட்சம் அபேஸ்….. போலீசார் விசாரணை…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்ட சூளகிரி அருகில் உள்ள பீர்ஜேப்பள்ளி பகுதியில் விமல் கார்த்திக்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். இதனையடுத்து விமல் கார்த்திக் வங்கி அதிகாரி தான் பேசுகிறார் என்று நம்பி தனது கணக்கு தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5,14,000 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்த விமல் கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |