Categories
தேசிய செய்திகள்

“வங்கிக் கடன் மோசடி”…. மெஹுல் சோக்ஸு மீது மேலும் 3 வழக்குகள்…. வெளியான தகவல்….!!!!!

மெஹுல் சோக்ஸுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து சென்ற 2010ம் வருடம் முதல் 2018 வரை பல கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதன் காரணமாக வங்கிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.13,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதன்பின் சோக்ஸி மீது சிபிஐ முதல் தகவலறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சோக்ஸிக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் சென்ற 2017ம் வருடத்தில் ஆன்டிகுவா-பாா்புடா நாட்டின் குடியுரிமையைப் பெற்ற சோக்ஸி, 2018ல் கடன் மோசடி வெளிச்சத்துக்கு வந்தவுடன் அந்நாட்டுக்கு தப்பிச்சென்றாா். பின் அவரை நாடுகடத்துவதற்குரிய நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கிகளுக்குக் கூடுதலாக ரூபாய்.6,746 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை சிபிஐ-யிடம் புகாரளித்தது. அதனை அடிப்படையாக கொண்டு சோக்ஸி மீது மேலும் 3 வழக்குகளை சிபிஐ பதிவுசெய்துள்ளது.

இதுகுறித்து சோக்ஸியின் வழக்கறிஞா் விஜய் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது, “வங்கிகளுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பை அடிப்படையாக கொண்டு ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதுபோன்ற சூழலில் சிறு சிறு இழப்புகளுக்கும் தனித் தனியாக எவ்வாறு வழக்குப்பதிவு செய்ய முடியும்..? அவா்கள் வாதம் சரி எனில், ரூபாய்.13,000 கோடியில் ஒவ்வொரு ரூபாய்க்கும் தனித் தனி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

பழிவாங்கும் நோக்கில்தான் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தான் வழக்கு விசாரணைகள் தோல்வியடைகிறது. குறிப்பிட்ட விவகாரத்தில் ஒரு வழக்கு மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என அரசின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இழப்பை சந்தித்ததாக ஒட்டு மொத்த வங்கிகள் சாா்பாக முன்பே வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே தனித் தனி வங்கிகளின் இழப்புக்காக தனித்தனியான வழக்குகளைப் பதிவுசெய்ய முடியாது” என்று கூறினார்.

Categories

Tech |