Categories
தேசிய செய்திகள்

வங்கிகளை திணறடிக்கும் கன்னடர்கள்….. நீங்களும் செய்வீர்களா…? வைரலாகும் புகைப்படம்…!!

வங்கிகளின் காசோலையில் தமிழில் எழுத கோரிக்கை வைத்து புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீப நாட்களாக மிகவும் பெரிய அளவில் பேசப்படக் கூடிய ஒரு பிரச்சனையாக மொழி பிரச்சனை திகழ்கிறது. மும்மொழி  கல்விக் கொள்கையின் வாயிலாக, மத்திய அரசு இந்தியை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் திணிக்க முயல்வதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்திலும், கர்நாடக மாநிலத்திலும் #ஹிந்தி_தெரியாது_போடா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்களைப் போட்டு மக்களும், பிரபலங்களும் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு ஹிந்தி தெரியவில்லை என்றால், வங்கியில் கடன் அளிக்க முடியாது என வங்கி அதிகாரி ஒருவர் சர்ச்சையாக பேசியதும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினர் இதுபோன்ற வங்கிகளுக்கும் பாடம் கற்றுத்தர வேண்டும் என தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வர,

கன்னடர்கள் அதை நிறைவேற்றி விட்டார்கள். அதாவது, வங்கிக் காசோலையில் கன்னடர்கள் கன்னட மொழியில் எழுதி ஹிந்தி வங்கிகளை திணறடித்து வருகிறார்கள். தமிழர்களும், இதேபோல தமிழில் காசோலையை நிரப்பினால் தான் தமிழ் படித்தவர்கள் மட்டுமே தமிழக வங்கியில் பணி புரிவார்கள் என குறிப்பிட்டு, வங்கி காசோலையில் தமிழில் எழுதச் சொல்லி கன்னடத்தில் எழுதப்பட்ட காசோலை புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். 

Categories

Tech |