Categories
தேசிய செய்திகள்

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது… நிர்மலா சீதாராமனிடம் திருமாவளவன் மனு…!!!

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று திருமாவளவன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் மனு அளித்துள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கல் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தனியார் மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியல் சமர்பிக்கப்பட்டது. அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு வந்து ஊழியர்கள் மற்றும் பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்று திருமாவளவன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் பங்குகளைத் தனியாருக்கு விற்பது நாட்டு மக்களுக்கு விருப்பமாக இல்லை என்றும், அரசு வங்கிகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |