நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களின் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தது. தற்போது ஏற்கனவே மாதத்தில் 15 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இனிவரும் 16 நாட்களில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப விடுமுறை நாட்கள் மாறுபடும்.
பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். அதனால் பொதுமக்கள் வங்கி தொடர்பான சேவைகளை முன்னதாகவே முடித்துக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 15 துர்கா பூஜை, அக்டோபர் 16 விஜயதசமி, அக்டோபர் 17, 18, 19, 20, 22, 23, 24, 26, 31 ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.