Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை!

யு19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்தபின் இந்திய வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இதில், டி-எல் முறைப்படி வங்கதேச அணி 170 ரன்களை எட்டி இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

இதனால், மிகுந்த மகிழ்ச்சியில் மைதானத்தில் ஓடிவந்த வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பம் குறித்து ஐசிசி வங்கதேச அணி மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்திய யு19 அணியின் மேலாளர் அனில் படேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் மோதலில் ஈடுபட்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அந்தச் சூழலில் அங்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது. இந்த சம்பவம் குறித்து நடுவர் எங்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், ஐசிசி வீடியோ ஆதாரங்கள் கொண்டு வங்கதேச அணி கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றும் நடுவர் உறுதியளித்ததாக தெரிவித்தார். இச்சம்பவம் நடந்தது குறித்து தான் மன்னிப்பு கோருவதாக வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/SardarAssam_PPP/status/1226613282443792384

Categories

Tech |