Categories
தேசிய செய்திகள்

வங்கதேசத்தின்…. முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருநங்கைகள் என்பவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், ஒரு தவறான பார்வையோடும் பார்க்க்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து திருநங்கைகள் தங்களுக்கும் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து மூன்றாம் பாலினத்தவர் என்ற பட்டியலில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  திருநங்கைகள் பல துறைகளில் மெல்ல மெல்ல காலெடுத்து வைத்து சாதித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேசத்தில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக மகளிர் தினத்தன்று தாஷினுவ அனன் ஷிஷிர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

இவருடைய இந்த முன்னேற்றம் திருநங்கைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று பாராட்டு வருகிறது. ஷிஷிர் குடிபெயர்ந்தவர்கள், திருநங்கைகளுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வருபவர். மேலும் தடைகளை தகர்த்து சாதனை படைத்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |