தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.இதனிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மீனவர்கள் வருகின்ற ஒன்பது மற்றும் 10 ஆகிய தேதிகளில் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் பத்தாம் தேதி வரை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.