Categories
சினிமா

“லோக்கல் சரக்கு” படம்…. வெளியான போஸ்டர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவரது மெடிக்கல் மிராக்கல், பூமர் அங்கிள் ஆகிய படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். இதையடுத்து யோகி பாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் நடிக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை ராஜ்குமார் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு “லோக்கல் சரக்கு” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யோகி பாபு மற்றும் தினேஷ் மாஸ்டர் இடம்பெற்றுள்ள இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சூரி தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டரானது இப்போது இணையத்தளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Categories

Tech |