Categories
உலக செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: மைக்கோ லைவ் குண்டுவெடிப்பு… 10 பேர் பலி, 46 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!

உக்ரைனின் மைக்கோலைவ் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக அந்நகர மேயர் அலுவலகம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 44 நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை காண்போம். ஏப்ரல் ஐந்தாம் தேதி அதிகாலை 2.02 மணி அளவில் உக்ரைனின் மைக்கோலைவ் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மேலும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நகர மேயர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அதிகாலை 1.43 மணியளவில்  ரஷ்ய தூதர்களை பிரான்ஸ் வெளியேற்றும் என அமைச்சக வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அதிகாலை 1. 14 மணியளவில் ரஷ்யா மீதான அமெரிக்க பொருளாதார தடைகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நள்ளிரவு 12.16 மணியளவில் புச்சா நகரில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

Categories

Tech |