நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட விக்னேஷ்சிவன் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின் திருமணம் கடந்த 9ஆம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய உள்ளதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதன்படி ரசிகர்கள், செய்தியாளர்கள் என யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் திருமணத்திற்கு வந்து இருந்த பிரபலங்கள் அனைவரும் டிஜிட்டல் அழைப்பிதழ் வாயிலாக தங்கள் மொபைல் போனில் வைத்திருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து வாழ்த்த வந்திருந்த பிரபலங்களுக்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பத்தியினர் சிறப்பு பரிசாக தாம்பூலப்பையில் வெள்ளியிலான குங்குமச் சிமிழும், தங்கச்சங்கிலியும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.