தயாரிப்பாளர் தரப்பில் நடிகைகளின் புதிய சம்பளப் பட்டியல் தயாராக இருப்பதாகவும் இதில் நயன்தாரா முதல் இடம் பிடித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது.
நடிகைகளின் சம்பளமானது படத்துக்குப்படம் வேறுபடுகின்றது. அதாவது படம் சூப்பர் ஹிட் ஆனால் நடிகைகலாகவே சம்பளத்தை ஏற்றிக்கொள்வதும் இதுவே படம் பிளாப் ஆனால் தயாரிப்பாளர்கள் பார்த்து குறைந்து விடுவதுமாக இருந்து வருகின்றது. தற்போது லாக்டௌன்க்கு பின் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகிக் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
தற்பொழுது நயன்தாரா இந்தப் பட்டியலில் ரூபாய் 4 கோடி வரை சம்பளம் வாங்கி முதல் இடத்தில் இருக்கின்றார். நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றியை பெற்று வரும் நிலையில் அவரது சம்பளம் உயர்ந்துள்ளது. மேலும் நயன்தாராவிற்கு அடுத்த இடத்தில் நடிகை காஜல் அகர்வால் இருக்கின்றார் இவர் ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்குகிறார்.
இந்நிலையில் நடிகைகள் தமன்னா ,எமிஜாக்சன், திரிஷா ஆகிய 3 பேரும் ரூபாய் 1.50 கோடியும் கீர்த்தி சுரேஷ் 80 லட்சம் ரூபாயும் ஸ்ருதிஹாசன் 1 கோடியும் அஞ்சலி 70 லட்சம் ரூபாயும் ஸ்ரேயா 80 லட்சம் ரூபாயும் ரெஜினா 60 லட்சமும் சம்பளமாக பெறுகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், போன்றோர் ரூ.40 லட்சத்தை சம்பளமாக நிர்ணயித்து இருக்கின்றனர். இதை தொடர்ந்து பாவனா , பிரணிதா ஆகிய 2 பேரும் 30 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். மேலும் அனுபமா பரமேஸ்வரன் 25 லட்சம் சம்பளமும் , ஸ்ரத்தா ஸ்ரீநாத் 10 லட்சம் ரூபாய் வீதம் சம்பளத்தை நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகின்றது.