Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லேசாக உரசிய மின்கம்பி…. தீப்பிடித்து எரிந்த லாரி…. போலீஸ் விசாரணை…!!

வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமரேசனுக்கு சொந்தமான சரக்கு லாரியில் சேகர் என்பவர் வைக்கோல் ஏற்றி சென்றுள்ளார். இதனை அடுத்து பெரியாளூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது லாரி உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து ஏரிய ஆரம்பித்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் வைக்கோலை அகற்றுவதற்குள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |