Categories
தேசிய செய்திகள்

“லெபனான் வெடிவிபத்து” கொதித்தெழுந்த மக்கள்…. அரசின் அலட்சியத்தால் நடந்த கொடூரம் என ஆவேசம்….!!

பெய்ரூட் வெடி விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சிய போக்கே காரணம் என்று குற்றம் கூறி பொதுமக்கள் அனைவரும் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் தீப்பிடித்து எரிந்ததால் துறைமுகம் முழுவதும் கொடூர தீ விபத்து ஏற்பட்டது. அதனால் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4000 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்று கூறிய பொதுமக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசு அலுவலகங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து வெடி விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி ஜர்ஜஸ் போட்சின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக  எடுத்துச் சென்ற போது உறவினர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கதறி அழுதனர்.இந்நிலையில் வெடி விபத்திற்கு காரணமான துறைமுக அதிகாரிகளை அந்நாட்டு அரசு வீட்டுக்காவலில் வைத்திருக்கிறது. லெபனான் நாட்டிற்கு பல்வேறு நாடுகள் உதவி உள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துகள் என பல்வேறு உதவி பொருள்கள் 3 விமானங்களில் அனுப்பப்பட்டிருக்கின்றன.

Categories

Tech |