Categories
கிரிக்கெட் விளையாட்டு

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி: மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக கங்குலி…. வெளியான அறிவிப்பு….!!!!

லெஜண்ட்ஸ் கிரிக்கெட்போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் வருகிற செப்டம்பர் 17ம் தேதி துவங்குகிறது. கொல்கத்தாவில் வருகிற செப்டம்பர் 16ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெற இருகிறது. இவற்றில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் நடைபெறும் இப்போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இதேபோல் அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் விரேந்திரசேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். முகமதுகைப்பும் இந்திய மகாராஜா அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இர்பான் பதான், யூசுப் பதான், தமிழகவீரர் பத்ரிநாத், பார்த்தீவ் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் ஆகிய அனுபவ வீரர்களும் இந்திய மகாராஜா அணிக்காக விளையாட இருக்கின்றனர். சென்ற சீசனில் அதிரடியாக விளையாடிய நமன்ஓஜா, அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங் மற்றும் ஜோகிந்தர் சர்மா ஆகிய நட்சத்திர வீரர்களும் மகராஜா அணிக்காக விளையாடுகின்றனர். இத்தொடரின் ஆணையராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி செயல்பட இருக்கிறார். நீண்ட தினங்களுக்கு பின் ரவிசாஸ்திரியும், கங்குலியும் இணைந்து உள்ளனர். உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன்மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லீஸ், ஜெய சூர்யா, முத்தையா முரளிதரன் போன்றோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மகாராஜா அணி விபரம்

கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமதுகைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ்படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜோகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி

உலக ஜெயிண்ட்ஸ் அணி விபரம்

இயன்மார்கன்(கேப்டன்), சிம்மன்ஸ், கிப்ஸ், காலிஸ், ஜெயசூர்யா, மாட் பிராயர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரூட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகார்ட்சா, முர்த்தசா, அஸ்கார் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கேவின் ஓ பிரெயின், தினேஷ் ராம்டின்

Categories

Tech |