Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் இணைந்த ‘வலிமை’ பட பிரபலம்… வைரலாகும் புகைப்படம்…!!!

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இன்று ஹைதராபாத்தில் லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா, கலை இயக்குனர் சுரேஷ், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஆகியோருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்கு நீரவ்ஷா தான் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ‌.

Categories

Tech |