Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லூசிஃபர்’ பட தெலுங்கு ரீமேக்… ஆந்திரா சூப்பர் ஸ்டாருடன் இணைந்த இயக்குனர் மோகன்ராஜா…!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் .

தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ராஜா ‘ஜெயம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் இவர் இயக்கிய ‘தனிஒருவன்’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இந்நிலையில் மோகன் ராஜா நடிகர் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் .

Lucifer 2 set to be announced soon? | Malayalam Movie News - Times of India

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் டொவினோ தாமஸ் , மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கை  இயக்கவுள்ளதை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் . தற்போது நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘ஆச்சாரியா’ படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்பதால் அடுத்த ஆண்டு ஜனவரியில் லூசிஃபர் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

 

Categories

Tech |