கொரோனா தொற்றின் 2-ஆம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டின் தொடக்கம் முதல் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்தன. அதன் பின்னர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததால் கிட்டத்தட்ட 1 மாத காலம் மூடப்பட்டிருந்த பள்ளிகள், டிசம்பர் 18,2021 முதல் 6-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய கலப்பின முறையில் நடைபெற்று வருகிறது.
ஆனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இடையில் டிசம்பர் 27-ஆம் தேதி மட்டும் பள்ளிகள் அவர்களுக்கு திறக்கப்பட்டது. தற்போது இன்று முதல் 15-ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை டெல்லி அரசு பள்ளிகளுக்கு 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி இயக்குனரகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த காலகட்டத்தில் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் வகுப்புகள் நடத்தப்படாது.
ஆனால் சர்வோதயா வித்யாலயா பள்ளிகளில் அனைத்து தலைவர்களும் ஜனவரி 1 முதல் 15 வரையிலான தேதிகளில் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். மேலும் உள் மதிப்பீட்டில் கணக்கிடப்படும் பணிகள் மற்றும் செயல்பாடுகளை பராமரிக்க பள்ளிகளை இயக்குனரகம் கேட்டுக்கொண்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை குறித்துக்கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் தனி கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.