Categories
மாநில செய்திகள்

லீவு எல்லாம் முடிஞ்சிட்டு!…. மீண்டும் ஊருக்கு போக இவ்வளவு பஸ்ஸா?…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

வாரயிறுதி, காந்திஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என அக்டோபர் மாத தொடக்கமே தொடர் விடுமுறையாக இருந்தது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உட்பட பல பேருக்கும் விடுமுறை என்பதால் கடற்கரைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களும் கூட்டநெரிசலுடன் காணப்பட்டது. மேலும் நீண்ட விடுமுறையை திட்டமிட்டு பலரும் வேலைபார்க்கும் வெளி மாவட்டங்களிலிருந்து தங்களின் சொந்த மாவட்டத்திற்கு சென்று இருக்கின்றனர். நேற்றுடன் விடுமுறைகள் நிறைவடைந்ததால் அவர்கள்  மீண்டுமாக தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திம்பினர்.

அந்த அடிப்படையில் தொடர் விடுமுறையை அடுத்து தங்களின் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பி வருவோருக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,” தொடர் விடுமுறை முடிந்து பல ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் 2 நாட்களுக்கு (அக்டோபர்-5, 6) அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் பல ஊர்களில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 1150 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 3,250 பேருந்துகளானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளுக்கு முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன் பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளத்தையும், tnstc official app செயலியையும் அணுக வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்கூறிய சேவையை பயன்படுத்தி பயன் பெறுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். வருகிற அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதற்குரிய முன் பதிவுகள் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |