Categories
மாவட்ட செய்திகள்

லிவ்விங் டு கெதர் பானியல் சேர்ந்து வாழ்ந்த காதலர்கள்…. காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆணழகன் பட்டம் பெற்ற காதலன்…. காரணம் என்ன தெரியுமா….??

லிவிங் டுகெதர் பாணியில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆணழகன் பட்டம் பெற்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சந்தியா மோகன் (வயது 31) இவர் பூந்தமல்லி அனைத்து காவல் மகளிர் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29) இவர் அந்த பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு சந்தியாவுக்கு சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

மணிகண்டன் சந்தியாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை சந்தியாவுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது மணிகண்டன் அந்த வீடியோவை சந்தியாவிடம் காண்பித்து தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சந்தியாவை மிரட்டியதும் மற்றும் அடித்து துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.

இதேபோல் மணிகண்டன் ஏற்கனவே தனது அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்துவரும் ஒருவரையும் சரமாரியாக அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ உதவிகளும் செய்துள்ளார். ஆனால் அந்த நபர் மணிகண்டன் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. தற்போது சந்தியா அளித்துள்ள புகாரை தொடர்ந்து அந்த நபரும் புகார் அளித்துள்ளார். இதனால் தற்போது மணிகண்டன் மீது காதலியை தாக்கியதுடன் கொலை முயற்சி ஆகிய இரண்டு வழக்குகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |