Categories
சினிமா தமிழ் சினிமா

‘லிப்ட்’ படத்தின்… ‘இன்னா மயிலு’ பாடல் செய்த டக்கரான சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது .

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். தற்போது இவர் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிப்ட்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காயத்ரி, கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எக்கா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இந்த பாடலை சிவகார்த்திகேயனும், சூப்பர் சிங்கர் பூவையாரும் இணைந்து பாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னா மயிலு பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக லிப்ட் படக்குழு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |