லிப்டில் சிக்கிய 9 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் லாட்ஜில் சுற்றுலாவுக்காக வந்த வட மாநிலத்தை சேர்ந்த 8 பேர் தங்கியுள்ளனர். நேற்று அனைவரும் கன்னியாகுமரி கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் லாட்ஜுக்கு வந்தனர். இந்நிலையில் மாடியில் இருக்கும் அறைக்கு செல்வதற்காக 9 பேர் லிப்டில் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பிறகு லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றதால் 9 பேரும் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு கருவி மூலம் லிப்டை விலக்கி பெரிதுபடுத்தி 1 ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். குறைந்தபட்சம் அந்த லிப்டில் 4 பேர் தான் செல்ல முடியும் என தெரிகிறது. ஆனால் 9 பேர் சென்றதால் லிப்டில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.